தமிழ்நாடு

திருப்பூர் ஆட்சியர் கொடுத்த “வலிமை” அப்டேட்!

Published

on

‘தல’ அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்தப் படம் மெகா ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியின் அடுத்தப் படைப்பாக வலிமை உருவாகி வருகிறது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின்னர் விறுவிறுப்பாக நடந்து வரும் வலிமை படத்தின் ஷூட்டிங் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளதாம். வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய சில காட்சிகள் மட்டும் இன்னும் பாக்கி உள்ளதாக படக்குழுத் தரப்பு தகவல் சொல்கிறது. இந்நிலையில் அனைத்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகளையும் முடித்து, வரும் ஏப்ரல் மாதம் ‘வலிமை’ திரைப்படத்தை வெள்ளித்திரையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறது.

அதே நேரத்தில் போஸ்ட் புரொடெக்‌ஷன் வேலைகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆகஸ்ட் இரண்டாவது வாரம் படம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

அஜித் ரசிகர்கள், ‘படம் சீக்கிரம் வரலைனாலும் பரவாயில்ல. அப்பப்போ அப்டேட் மட்டுமாவது கொடுங்க’ என்று வினோத், போனி கபூரிடம் கெஞ்சி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வைரலான ‘வலிமை அப்டேட்’ விவகாரத்தை வைத்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஒரு ‘வலிமை’ அப்டேட் கொடுத்துள்ளார்.

அதாவது தேர்தலில் வாக்குச் செலுத்துவதின் அவசியத்தை வலியுறுத்தி வலி’மை’ என்னும் விரலில் மை இடுவதைச் சுட்டிக்காட்டி, ‘ஜனநாயகத்தின் வலிமை உங்கள் ஒவ்வொருவரின் ஓட்டிலும் உள்ளது. 100 சதவீத ஓட்டு இந்தியர்களின் பெருமை’ என்று வித்தியாசமான முறையில் விளம்பரம் ஒன்றை செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் படுவைரலாக மாறி வருகிறது.

Trending

Exit mobile version