இந்தியா

வரலாற்றிலேயே இல்லாத விசேஷம்… கோலாகலமாகும் திருப்பதி ஏழுமலையான் கோயில்!

Published

on

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக அடுத்த 10 நாட்களுக்கும் சொர்க்கவாசல் திறந்தே வைக்கப்பட உள்ளது.

வைக்குண்ட ஏகதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஆனால், வரலாற்றிலேயே இதுவரையில் இல்லாத நிகழ்வாக அடுத்த 10 நாட்களுக்கும் சொர்க்க வாசல் திறந்தே வைக்கப்பட உள்ளது. உள்ளூர் பொதுமக்களுக்கு தரிசனம் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் டோக்கன் என்ற கணக்கில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் இந்த 10 நாட்கள் விசேஷ வழிபாடு இலவசமாகவே வழங்கப்பட உள்ளது. இதற்காக உள்ளூர் மக்கள் திருப்பதி கோயிலில் குவியத் தொடங்கியுள்ளனர். டோக்கன் விநியோகத்துக்காக ஐந்து சிறப்பு கவுன்டர்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று டிசம்பர் 25-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரையில் சொர்க்கவாசல் திறந்தே வைத்திருக்கப்படும்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொரோனா கட்டுப்பாடுகளுக்கு நடுவிலும் இலவச டோக்கன் பெற மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

seithichurul

Trending

Exit mobile version