இந்தியா

காளகஸ்தி கிராமமே மூழ்கிறதா? தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை!

Published

on

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் உள்ள காளகஸ்தி கிராமமே மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து அதனை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதன் காரணமாக அங்கு உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருப்பதி மற்றும் திருமலையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து உள்ளதாகவும் இதனால் திருமலை கோயில் முழுவதும் வெள்ளத்தில் உள்ளது என்பதும் பக்தர்கள் இதனால் அவதியுற்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள மிகப்பெரிய ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதை அடுத்து அந்த ஏரி உடையும் அபாயம் இருப்பதாக ஆந்திர மாநில பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை ஆந்திராவில் உள்ள ஏரி உடைந்தால், அதன் கீழ் உள்ள காளகஸ்தி உள்பட 80 கிராமங்கள் முழுதும் அபாயம் ஏற்பதாகவும் இதனை தடுக்க 80 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது கூறப்படுகிறது.

புகழ்பெற்ற சிவன் கோயில் உள்ள காளகஸ்தி கிராமமே மூழ்கும் அபாயம் இருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending

Exit mobile version