இந்தியா

திருப்பதி கோவிலில் தரிசன தேதியை மாற்றி கொள்ளலாம்: புதிய வசதி அறிமுகம்

Published

on

இந்தியாவிலேயே அதிகமான பக்தர்கள் வருகை தரும் கோவில்களில் ஒன்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் என்பது தெரிந்ததே. இங்கு தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதுண்டு. ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்களின் வருகை குறைந்து கொண்டே உள்ளது.

இந்த நிலையில் தற்போது திருப்பதியில் புதிய வசதி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவையில் பங்கேற்பதற்காக பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய தரிசன தேதியை மாற்றி கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் முக்கிய விசேஷங்களில் ஒன்றான ஆர்ஜித சேவைக்காக ஆன்லைன் டிக்கெட் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வினியோகம் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த தேதிகளில் முன்பதிவு செய்து கொண்டவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் ஏதாவது ஒரு தேதிக்குள் தங்களுடைய தரிசன தேதியை மாற்றி கொள்ளலாம் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் விரைவில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version