இந்தியா

ஜூலை மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் எப்போது கிடைக்கும்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Published

on

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை மாத ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதி குறித்த அறிவிப்பை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மாதம் ஆர்ஜித சேவா டிக்கெட் வரும் 25-ஆம் தேதி முதல் ஆன்லைனில் கிடைக்கும் என்றும் சுப்ரபாதம் அர்ச்சனை , தோமாலை சகஸ்ர கலசாபிஷேகம் திருப்பாவாடை போன்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்றும் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் தேவைப்படும் பக்தர்கள் www. tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version