இந்தியா

120 ரூபாய் டிக்கெட் 2000 ரூபாய்: திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Published

on

120 ரூபாய் சேவை கட்டணமாக பெற்று வந்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் தற்போது 2,000 ரூபாயாக கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

திருமலை திருப்பதி தேவஸ்ஹானம் பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள் வசூலித்து வருகின்றன என்பதும் குறிப்பாக விஐபி சேவைக்கு 500 ரூபாய் கட்டணம் பெறப்பட்டு வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது 120 ரூபாய் மற்றும் 240 ரூபாய் பெற்றுக்கொண்டு ஒரு சில சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அந்த சேவைகளின் டிக்கெட்டின் விலையை ரூ.2000 என உயர்த்தப் போவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது .

சுப்ரபாதம் சேவை கட்டணம் தற்போது 120 ரூபாய் பெறப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 2,000 ரூபாயாக உயர்த்த போவதாகவும் அதேபோல் தோமாலை, அர்ச்சனை டிக்கெட் கட்டணம் தற்போது 240 என இருக்கும் நிலையில் அந்த கட்டணத்தையும் 2000 ரூபாயாக வைத்து போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விஐபி தரிசன டிக்கெட் கட்டணம் 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்துவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் சுப்ரபாதம் அர்ச்சனை கட்டணங்களுக்கு விலையில் மாற்றம் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version