இந்தியா

12 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு: மத்திய அரசின் நிறுவனம் சாதனை

Published

on

மத்திய அரசின் செம்மொழி தமிழாய்வு நிறுவனம் திருக்குறளை 12 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் இந்த மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது .

திருக்குறளை 12 மொழிகளில் மொழிபெயர்க்க செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சமீபத்தில் முடிவு செய்தது. இதற்கான மொழி பெயர்ப்பு பணிகள் முடிவடைந்து அச்சிடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் வரும் ஜூன் மாதத்தில் 12 மொழிகளில் திருக்குறள் வெளியிடப்படும் என்றும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் இயக்குனர் சந்திரசேகர் கூறியபோது திருக்குறளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி பெயர்த்து, தமிழ் மொழியின் தொன்மையை, தமிழரின் பண்பாட்டை அனைவருக்கும் தெரிவிக்கும் விதமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் .

இந்தி, சமஸ்கிருதம், உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகவும், இந்த புத்தகத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version