தமிழ்நாடு

இரவு 10.30 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி!

Published

on

நேற்று இரவு 10.30 மணிக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திருக்குறள் இடம் பெற்று இருந்தது என்பதும் இந்த ஆண்டு குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வில் திருக்குறள் நீக்கப்பட்டு இருந்தது என செய்திகள் வெளி வந்ததை பார்த்ததோம்.

இதனை அடுத்து தமிழார்வர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட திருக்குறள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக நேற்று இரவு 10.30 மணிக்கு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் என்னும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட பாடத்திட்டம் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாய தமிழ் மொழி தேர்வு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வு திட்டம், பாடத் திட்டம் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கீழ்க்கண்ட தேர்வு திட்டம் மற்றும் பாடத்திட்டத்தை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

* கட்டாய தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்(விரிந்துரைக்கும் வகை)

* கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)

* கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை)

seithichurul

Trending

Exit mobile version