தமிழ்நாடு

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் அறிவித்த திடீர் மாற்றம்: பக்தர்கள் அதிர்ச்சி!

Published

on

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகம் அறிவித்த திடீர் அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் வழிபாட்டு தலங்களுக்கும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகமும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் இதுவரை அதிகாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தரிசன நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முதல் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோவில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பதும் வழக்கம்போல் முன்பு இருந்த தரிசன நேரத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version