சினிமா செய்திகள்

2019-ம் ஆண்டு இந்தியர்களால் அதிகம் விரும்பப்பட்ட பெண்கள் பட்டியல் வெளியீடு!

Published

on

2019-ம் ஆண்டு இந்தியாவில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 50 பெண்கள் பட்டியலை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் 2019-ம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட பெண்ணாக முதல் இடத்தில் திஷா பதானி இடம்பெற்றுள்ளார். இவர் எம்.எஸ்.தோணி திரைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் சுமன் ராவ், 3வது இடத்தில் கத்ரினா கைஃப், 4 வது இடத்தில் தீபிகா படுகோனே, 5வது இடத்தில் வர்திகா சிங், 6வது இடத்தில் கியாரா அத்வானி, 7வது இடத்தில் ஸ்ரத்தா கபூர், 8வது இடத்தில் யாமி கவுதம், 9வது இடத்தில் அதிதி ராவ், 10வதி இடத்தில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தென் இந்தியாவிலிருந்து புகழ் பெற்றவர்கள் என்று பார்த்தால் சமாந்தா (17வது இடம்) மட்டும் டாப் 20-க்குள் இடம்பெற்றுள்ளார். டாப்ஸி 36வது இடத்தை பிடித்துள்ளார்.

Trending

Exit mobile version