தமிழ்நாடு

தமிழக தேர்தல்: டைம்ஸ் நெள கருத்துக்கணிப்பின் முடிவுகள்!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கூட்டணி தொகுதி உடன்பாடு பணியை முடித்துவிட்டு வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு பிரச்சாரத்துக்கு செல்ல அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது குறித்த டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

தமிழக தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் முக ஸ்டாலின் முதல்வராக 38 சதவீத வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் டைம்ஸ் நெள அறிவித்துள்ளது. அதேபோல அதிமுக-பாஜக கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக 31 சதவீத வாக்குகள் கிடைத்ததாகவும் டைம்ஸ் நவ் சர்வேயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சர்வேயின் படி பார்த்தால் திமுக கூட்டணி வெற்றி பெற்று முக ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும் நிலையில் கருத்துக் கணிப்பில் மாற்றம் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version