தமிழ்நாடு

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு: தமிழக நிலவரம்!

Published

on

தேர்தல் வந்துவிட்டால் கருத்துக்கணிப்புகளிக்கு பஞ்சமிருக்காது. பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்தாலும் சில முக்கியமான ஊடகங்களால் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும். அந்தவகையில் தேசிய ஊடகமான டைம்ஸ் நவ் மக்களவை தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

டைம்ஸ் நவ் ஊடகம் இந்த கருத்துக்கணிப்பை நேற்று வெளியிட்டது. அதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அதிகபட்சமாக 33 தொகுதிகளிலும், அதிமுக-பாஜக கூட்டணி 6 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. மற்ற எந்த கட்சிகளும் ஒரு இடத்திலும் கூட வெற்றிபெறாது என டைம்ஸ் நவ் கணித்துள்ளது.

திமுக கூட்டணிக்கு இந்த தேர்தலில் 53.12 சதவீதமும், அதிமுக கூட்டணிக்கு 39.61 சதவீதமும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட இதர கட்சிகளுக்கு 7.27 சதவிகிதமும் வாக்குகள் கிடைக்கும் என இந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் 62.8 சதவீத வாக்குகளையும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் 29.37 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தான் கடந்த தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version