தமிழ்நாடு

இரண்டாவது கொரோனா தடுப்பூசி போடுவதற்கான காலக்கெடு குறைப்பு!

Published

on

ஜனவரி 16-ம் தேதி கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.

முதல் கொரோனா தடுப்பூசி போடுபவர்கள், இரண்டாம் முறையாக இன்னொரு தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் கொரோனா தடுப்பூசிக்கும், இரண்டாம் தடுப்பூசிக்கும் 8 வாரங்கள் கால இடைவெளி வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதை தற்போது 6 முதல் 8 வாரங்கள் இடைவெளியில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிவித்துள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் இலவச கொரோனா தடுப்பூசிக்குக் காத்திருக்க விரும்பாதவர்கள் தனியார் மருத்துவமனைகளில் ஒரு ஊசிக்கு 250 ரூபாய் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம்.

Trending

Exit mobile version