இந்தியா

காலமதாமதம் ஆகின்றதா சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்?

Published

on

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பில் மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இன்று முதல் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் விறுவிறுப்பாக ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை 26 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் மதிப்பெண் பட்டியல் வரவில்லை. சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதற்காக கால அவகாசம் ஜூலை 22ஆம் தேதி வரை குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து தற்போது கால அவகாசம் மேலும் மூன்று நாட்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு மதிப்பெண்களை கணக்கிடுவதற்கு ஜூலை 25 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அவர்கள் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்

பள்ளிகள் மற்றும் ஆசிரியரின் நலன் கருதி இந்த கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் 25-ஆம் தேதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண்களை சிபிஎஸ்இ பள்ளிகள் கண்டிப்பாக கணக்கிட வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஒருவேளை அவ்வாறு மதிப்பெண்களை கணக்கிடாத பள்ளிகளின் முடிவுகள் தாமதமாக வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் வரும் 31-ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்த நிலையில் அதனை சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உறுதி செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

seithichurul

Trending

Exit mobile version