இந்தியா

நீட் தேர்வு விண்ணப்பம் குறித்து தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி

Published

on

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே மாதம் ஆறாம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு அறிவித்துள்ளது .

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது என்பதும் இந்த நுழைவுத்தேர்வை இலட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் முறை தொடங்கியது என்பதும், மே 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க தற்போது மே 15 வரை விண்ணப்பிக்கலாம் என கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதன்படி neet.nta.nic.in என்ற இணையதளத்தின் மூலம் மே 15 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நீட் தேர்வுக்கு 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் மேலும் அதிகமானோர் விண்ணப்பிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version