இந்தியா

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு..!

Published

on

பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 1-ம் தேதி வரையில் அவகாசம் வழங்கி இருந்தது. ஆனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இதுவரையில் தங்களது ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்கவில்லை என்பது மத்திய அரசுக்குத் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க செப்டம்பர் 1-ம் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் தொழிலாளர்கள் சார்ந்து நிறுவனங்கள் சார்பில் பணம் கணக்கில் செலுத்த முடியாது போகலாம். இதனாலே ஆதார் எண் பிஎஃப் கணக்கில் இடம் பெறுவது அவசியம் ஆக உள்ளது.

மேலும், நீங்கள் ஏற்கெனவே உங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைத்து இருந்தாலும் கூடுதலாக ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

Trending

Exit mobile version