தமிழ்நாடு

மின்கட்டணம் செலுத்த கால அவகாசம்: எந்தெந்த மாவட்டங்களுக்கு என அறிவிப்பு!

Published

on

ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் செலுத்த 15ஆம் தேதி கடைசி தேதி என்ற நிலையில் தற்போது ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் அறிவித்துள்ளார்.

சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருவதன் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது என்பதும் பல பகுதிகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இணையதளங்களிலும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை கணக்கில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சற்று முன் ஒருசில மாவட்டங்களுக்கு மட்டும் மின் கட்டணம் செலுத்தும் தேதியை கால அவகாசம் நீடித்ஹ்டு அறிவித்துள்ளார்.

இதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்தும் தேதி 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 26,000 இணைப்புதாரர்களுக்கு மட்டுமே மின் வினியோகம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அதுவும் விரைவில் சரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version