இந்தியா

CUET PG நுழைவுத் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு: எத்தனை நாள் தெரியுமா?

Published

on

முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கான பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 18 என்பது கடைசி தேதியாக இருந்த நிலையில் தற்போது ஜூலை 4 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 24 உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்பிற்கு கடந்த மே மாதம் விண்ணப்பம் தொடங்கியது, ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 18 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஜூலை 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் இருந்து கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வெளியானதை அடுத்து இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தேர்வு குறித்து விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்புவோர் https://cuet.nta.nic.in/ மற்றும் www.nta.ac.in ஆகிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்பதும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளம் சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version