தொழில்நுட்பம்

மாற்றுப் பாதையில் இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் டிக்டாக்..!

Published

on

இந்தியாவுக்குள் எப்படியாவது மீண்டும் நுழைந்துவிட வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது சீன ஆப் ஆன டிக்டாக்.

சீன செயலிகளை தடை செய்ய சில மாதங்களுக்கு முன் இந்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனால், இந்தியாவின் டாப் ஆப் ஆக முதலிடத்தில் கலக்கிக் கொண்டிருந்த டிக்டாக் ஆப் இந்தியாவிலிருந்து ஒரே இரவில் காணாமல் போய்விட்டது. இந்த சூழலில் டிக்டாக் விட்டுச் சென்ற இடத்தைப் பிடிக்க ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸாகிராம் ஆப் பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், இந்தியா போன்ற ஒரு மாபெரும் சந்தையை விட்டுப் போக முடியாமல் மீண்டும் எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என மாற்றுப் பாதையில் சிந்திக்கத் தொடங்கியுள்ளது டிக்டாக் ஆப்-ன் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ். பைட டான்ஸ் வழங்கும் டிக் டாக் ஆப்பை தற்போது இந்தியாவைச் சேர்ந்த க்ளான்ஸ் என்னும் ஆப்-பிடம் விற்பனை செய்ய பைட் டான்ஸ் முயற்சித்து வருகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த க்ளான்ஸ் நிறுவனமும் பைட் டான்ஸ் நிறுவனமும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை கசிய விடாமல் தொடர்ந்து காய்களை நகர்த்தி வருகிறதாம்.

Trending

Exit mobile version