சினிமா செய்திகள்

பிக்பாஸில் ஜி.பி.முத்து? புகைப்படத்தை பகிர்ந்து உறுதி செய்ததால் பரபரப்பு!

Published

on

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது என்பதும் இது குறித்த வீடியோ ஒன்று சமீபத்தில் விஜய் டிவி டுவிட்டர் பக்கத்தில் வெளியானது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வின்னர் கனி, மற்றும் அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷா, சுனிதா, ஷகிலாவின் மகள் மிளா உள்பட ஒரு சிலரது பெயர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அடிபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டிக்டாக் மூலம் பிரபலமடைந்து தற்போது யூடியூபில் பிரபலமாக இருக்கும் ஜிபி முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டின் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

காமெடியான நெல்லை தமிழில் சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசம் கலந்து பேசும் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் என்ன அட்டகாசம் செய்வார் என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

பிக்பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கும் என்றும் ஜனவரி மாதம் முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version