தமிழ்நாடு

24 சுற்று முடிவில் கமல் – வானதி சீனிவாசன் இடையில் கடும் போட்டி; யார் வெற்றியாளர்?

Published

on

கமல், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்தித்தார். இந்நிலையில் இன்று காலை முதல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வளரவில்லை என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. அதற்கு ஏற்றாற் போல பெரும்பான்மை தொகுதிகளில் நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் கமல் போட்டியிட்ட கோவை தெற்குத் தொகுதியில் அவர் மாலை வரை முன்னிலையில் இருந்தார்.

தற்போது அங்கு 24 சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு உள்ள நிலையில், பாஜகவின் வானதி சீனிவாசன், 48,270 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து கமல்ஹாசன், 47,156 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸின் மயூரா ஜெயக்குமார் 40,234 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.

இன்னும் இரண்டு சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டும் என்பதால் கோவை தெற்குத் தொகுதி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version