சினிமா செய்திகள்
கொட்டும் மழை, மணல் மூட்டை: டிக்கெட் டு ஃபினேலே டாஸ்க்கில் அமீர்!
கொட்டும் மழையில் டிக்கெட் டு ஃபினேலே டாஸ்கில் வெற்றிபெற அமீர் மற்றும் சிபி ஆவேசமாக விளையாடும் காட்சிகள் இன்றைய முதல் புரமோ வீடியோவில் உள்ளன.
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கான டாஸ்க் இந்த வாரம் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 10 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் முதலில் நிரூப் வெளியேற்றப்பட்டார். அதன்பின் தாமரை மற்றும் வெளியேற்றப்பட்ட நிலையில் அடுத்ததாக ராஜூ மற்றும் பிரியங்காவும் வெளியேற்றப்பட நேற்று கடைசியாக சிபி, சஞ்சீவ் மற்றும் அமீர் ஆகிய மூவர் விளையாடினார்.
இதில் சஞ்சீவ் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது இறுதிப் போட்டிக்கான கடைசி டாஸ்க்கில் சிபி மற்றும் அமீர் விளையாடி வருகின்றன. இதில் மணல் மூட்டை ஒரு கையில் பிடித்தபடி ஒற்றைக்காலில் இருக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காலில் அடிபட்ட வலியுடன் இருக்கும் அமீர் இந்த டாஸ்க்கில் மன உறுதியுடன் ஈடுபட சிபியும் அவருக்கு ஈடு கொடுத்து வருகிறார், இன்று வெளியான முதல் புரோமோவில் அமீர் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது போல் தெரிகிறது.
இருப்பினும் இன்றைய அடுத்தடுத்த புரோமோ வீடியோ மற்றும் நிகழ்ச்சியை பார்த்து முடிவை தெரிந்து கொள்ளலாம். கொட்டும் மழையில் அடிபட்ட காலுடன் அமீர் இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக அவருக்கு பாராட்டுகள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day89 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/hNxn2Mbms8
— Vijay Television (@vijaytelevision) December 31, 2021