சினிமா செய்திகள்

பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்: மல்லுகட்டும் பிரியங்கா-தாமரை!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று டிக்கெட் டு ஃபினாலே என்ற டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த டாஸ்க்கில் வெற்றிபெற பிரியங்கா மற்றும் தாமரை மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் காட்சிகள் இன்றைய புரொமோ வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் நேற்று இரண்டு பேர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தற்போது 8 பேர் உள்ளனர். இந்த எட்டு பேர்களில் ஒருவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றுவிடலாம் என்பதற்கான டாஸ்க் ஒன்று வைக்கப்படுகிறது.

டிக்கெட் டு ஃபினாலே என்ற இந்த டாஸ்க்கில் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுபவர் யார்? தகுதி இல்லாதவர் யார் என்பதை போட்டியாளர்களே தீர்மானம் செய்ய வேண்டுமென பிக்பாஸ் அறிவிக்கின்றார். இதனை அடுத்து நிரூப்பை வெளியேற்ற முதல் கட்டமாக காய் நகர்த்தும் பிரியங்கா அவரை டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் இருந்து வெளியேற்ரி விட்டதாக தெரிகிறது.

அதன் பின்னர் அடுத்தடுத்து நான்கு பேர்கள் வெளியேறிவிட்ட நிலையில் தாமரை, பிரியங்கா, பாவனி மற்றும் ராஜூ ஆகிய நால்வர் இந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் உள்ளனர். இதில் அடுத்தகட்டமாக தாமரையை வெளியேற்ற அவரது பாணியில் பிரியங்கா முயற்சி செய்கிறார். ஆனால் அந்த முயற்சிகளில் அவருக்கு கிட்டத்தட்ட தோல்விதான் கிடைக்கிறது.

பிரியங்காவின் கேள்விகளுக்கு வழக்கம்போல் அப்பாவித்தனமாகவும், குழப்பமாகவும், அதே நேரத்தில் ஆணித்தரமாகவும் தாமரை பதிலளித்து டிக்கெட் டு ஃபினாலே தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் இந்த நால்வரில் யார் டிடிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்பதை இன்றைய நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்வோம்.

Trending

Exit mobile version