ஆரோக்கியம்

தூதுவளையின் மருத்துவ குணங்கள் & நன்மைகள்!

Published

on

தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்து காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும்.

தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும்.

ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளை செடியின் பூவை பறித்து பாலில் போட்டு காய்ச்சி குடித்தால், நோயின் தொந்தரவு குறையும்.

மழைக்காலம் நெருங்குவதால் அனைவருக்கும் சளி, இருமல் உள்ளிட்ட நோய்கள் வரும் வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நுரையீரல் சார்ந்த நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதில் தூதுவளை பெரும் பங்கு வகிக்கிறது.ந்து

குறிப்பாக ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது. தூதுவளையை உலர வைத்து பொடி செய்து வைத்து பாலில் கலந்து சாப்பிடலாம். தூதுவளை இலையைத் துவையல் அரைத்தும், ரசம் வைத்தும் சாப்பிடலாம்.

Trending

Exit mobile version