சினிமா செய்திகள்

Thunivu VS Varisu: பொங்கல் வின்னர் யார்? தல பொங்கலா தளபதி பொங்கலா?

Published

on

பொங்கல் பண்டிகைக்கு ஒரே நாளில் வெளியான விஜய்யின் வரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு என தமிழ் சினிமா மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்கு சாட்சியாக இருந்தது. இரண்டு படங்களும் திரையரங்குகளில் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓடிவிட்டதால், 250 கோடிக்கு மேல் வசூல் செய்த துணிவு மீது உலகளவில் ₹300 கோடிக்கும் அதிகமான மொத்த வருவாயுடன் வாரிசு தெளிவான பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாளராக உருவெடுத்துள்ளது.

இதற்குமுன் 2014ஆம் ஆண்டு வீரம் – ஜில்லா படங்கள் நேருக்கு நேர் பொங்கல் ரிலீசாக மோதியதை அடுத்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒரே நாளில் ரிலீசாகினது என்பது உறிப்பிட்டத்தக்கது.

விஜய் நடித்த வாரிசு, தந்தையின் வணிக சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவதற்காக மூன்று சகோதரர்களுக்கிடையே  நடக்கும் போட்டியைப் பற்றிய குடும்ப படமாகும்.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின் தயாரிப்பாளர் போனி கபூர்- இயக்குநர் ஹெச்.வினோத் – நடிகர் அஜித் ஆகியோர் மூன்றாவது முறை கூட்டணியில் உருவான படம் “துணிவு. வாரிசுக்கு போட்டியாக பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11 வெளியானது. இந்த படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். ஜான் கொக்கைன், சமுத்திரகனி, ஜி.எம்.சுந்தர், பகவதி பெருமாள், வீரா, அஜய் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தில் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. மங்காத்தாவுக்கு பிறகு அஜித் க்ரே கதாபாத்திரமாக நடிக்கும் இப்படம், கிரெடிட் கார்டு, வங்கி மோசடி என பல்வேறு விஷயங்கள் தொடர்பான மோசடிகளை வெளிக்கொணரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், விஜய் தற்போது தனது அடுத்த படமான லியோவின் படப்பிடிப்பில் இருக்கிறார்.  மாஸ்டருக்குப் பிறகு லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைக்கின்றனர். ஆக்டேன் கேங்ஸ்டர் படமாக இருக்கும் இதில் த்ரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன் மற்றும் ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version