தமிழ்நாடு

நீதிபதிகளை விமர்சித்த ‘துக்ளக்’ குருமூர்த்தி.. நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல்!

Published

on

நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த துக்ளக் பத்திரகை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 51 ஆண்டு விழாவில் அரசியல்வாதிகள், நீதிபதிகளை கடுமையாக விமர்சித்து துக்ளக் ஆசரியர் பேசியிருந்தார். அரசியல்வாதிகளால் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், யார் காலையாவது, யார் மூலமாவது தான் நீதிபதிகளாக வந்துள்ளனர். ஊழல் செய்பவர்களை நீதிபதிகள் தண்டிப்பதில்லை. தகுதிவாய்ந்த நீதிபதிகள் வந்தால் இதுபோல் நடந்திருக்காது  என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் அலெக்சாண்டர் இது குறித்து வேதனை தெரிவித்தார். மேலும், நீதிபதிகளை களங்கப்படுத்தியதற்கு குரூமூர்த்தி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், குருமூர்த்தி பேசியதை மனுவாக அளிக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி, குருமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு தொடரப்பட்டது.

seithichurul

Trending

Exit mobile version