சினிமா செய்திகள்

உண்மைச்சம்பவம் தான், ஆனால் விபரீத சிந்தனை: ‘ஜெய்பீம்’ குறித்து ‘துக்ளக்’ கட்டுரை

Published

on

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் உண்மை சம்பவம்தான், ஆனால் விபரீத சிந்தனை என ‘துக்ளக்’ இதழில் கட்டுரை வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது:

சம்பவம் என்னவோ உண்மைதான், அத்துடன் விபரீத சிந்தனைகளையும் சேர்த்து தந்திருப்பது தான் கவலைக்குரிய விஷயம் என ஜெய்பீம் படம் குறித்து ‘துக்ளக்’ இதழில் கட்டுரை வெளிவந்துள்ளது. குறிப்பாக போலீசுக்கு எதிரான மனோபாவத்தை மக்களிடையே ஏற்படுத்த பெரும் முனைப்பு இந்த படத்தில் காட்டப்பட்டிருப்பது ஆபத்தானது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீசுக்கு எதிரான அபாண்டங்களை உண்மையில் நடந்தது போல் சித்தரித்து ஒரு சமூகத்தினரை அவர்களுக்கு எதிராக திருப்ப நினைக்கும் படக்குழுவினரின் சிந்தனை போக்கை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற மக்கள் போலீசை நம்பாமல் வேறு யாரை நம்பி இருக்க வேண்டும் என்று இவர்கள் போதிக்கிறார்கள் என்றும் ‘துக்ளக்’ கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

குற்றமே செய்யாத மலைவாழ் இருளர் வகுப்பைச் சேர்ந்தவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் காட்டுத்தனமாக லாக்கப்பிலும், வெளியிலும் அடித்து நொறுக்குகின்றனர் போலீசார் என்றும் அவரைக் கொன்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒரு வன்னியர் என்றும் பிறகு செய்யப்பட்ட மாற்றத்தின் படி வன்னிய அடையாளத்தை அகற்றிவிட்டு இந்து என்பது போலவும் திரித்து காட்டப்பட்டுள்ளது என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க போராடிய அன்றைய வக்கீல் சந்துருவும், வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் பாராட்டுக்கு உரியவர்கள் என்றும் இந்த திரைப்படத்தில் பாராட்டுக்குரிய அம்சங்கள் பல உள்ளன என்றும் ஆனால் படக்குழுவினரின் தேவையில்லாத ஹிந்தி எதிர்ப்பு, இடதுசாரி சிந்தனைகள் அவற்றுடன் கலந்திருப்பது துரதிஷ்டமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தகைய ஹிந்து விரோத, ஜாதி, மத மோதலுக்கு வழிவகுக்கும் சினிமாக்கள் சமீபகாலமாக அவ்வப்போது வெளியாகின்றன என்றும், இந்த போக்கை தடுத்து தணிக்கை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version