உலகம்

குழந்தையை சிதைத்தவனுக்கு தந்தை கண்முன் தூக்கு: பாக்கிஸ்தான் அதிரடி.! பின்பற்றுமா இந்தியா?

Published

on

நம் இந்தியா மட்டும் இன்றி பல உலக நாடுகளையும் உலுக்கிக்கொண்டு இருக்கும் ஒரு சாபக்கேடு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் கொடுமைகளே. துபாய் போன்ற நாடுகளில் கடுமையான தண்டனைகள் மூலம் இத்தகைய குற்றங்கள் குறைக்கப்பட்டு வருவதை தொடர்ந்து, சமீபத்தில் பாகிஸ்தானும் அதை பின்பற்ற துவங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், ஜைனப் அன்சாரி என்ற சிறுமி இம்ரான் அலி என்பவரால் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி 4 நாட்கள் கழித்து குப்பைத்தொட்டியில் சடலமாக கிடைத்த சம்பவம் உலகை உருகியது. இம்ரான் அலி-யால் அந்த சிறுமி கடத்தப்படும் சிசிடிவி ஆதாரத்தை அந்த சிறுமியின் உறவினர்களே காவல் நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் இம்ரான் அலியை கடந்த 23ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, இம்ரான் அலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் சிறுமியின் தந்தை அமீன் அன்சாரி கண் முன்பு தூக்கிலிடப்பட்டார். இந்த சிறுமி மட்டுமின்றி, இதுவரை பல சிறுமிகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றத்திற்கு இம்ரான் அலிக்கும் தொடர்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தண்டனைகள் இன்றோடு நிற்காமல் மற்ற நாடுகளில் முக்கியமாக நம் இந்தியாவில் இனி வரும் காலங்களில் தொடருமாயின் எதிர்காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை நாம் உருவாக்க முடியும். சட்டங்களை கடுமையாக்கி சிந்தித்து துணிவாக செயல்படுவோம்.

seithichurul

Trending

Exit mobile version