தமிழ்நாடு

3 ஆசிரியர்களுக்கு கொரோனா: பள்ளியை மூட கலெக்டர் உத்தரவு!

Published

on

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே ஒரு சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற செய்தி வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்றின் ஆசிரியர்கள் மூன்று பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பள்ளியை மூன்று நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பித்துள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் நெசவாளர் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 4ஆம் தேதி ஆசிரியை ஒருவருக்கு கொரோனா உறுதியானது. இதனையடுத்து அந்த பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த பள்ளியில் உள்ள மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இருப்பினும் 3 ஆசிரியர்களை தவிர வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக 3 நாட்களுக்கு அந்த பள்ளியை மூட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும் என்றும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அந்த பள்ளியில் உள்ள 100 மாணவ மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், வேறு யாருக்கும் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை விடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version