தமிழ்நாடு

மாணவர்களுக்கு கொரோனா: திடீரென மூடப்பட்ட கோவை பள்ளி!.

Published

on

தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும் அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

பள்ளிகள் திறந்த ஒரு சில நாட்களில் ஒரு சில மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது என்பதும் சில ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும் செய்திகள் வெளியானது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று மேலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை என்ற அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் மூன்று பேர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தது இதனை அடுத்து அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்த பள்ளி அதிரடியாக மூடப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று பேருக்கு ஒரு தொற்று ஏற்பட்டதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த பள்ளி முழுவதும் சானிடைசர் மூலம் தூய்மைப்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version