தமிழ்நாடு

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் தென்மாவட்ட மக்களுக்கு நற்செய்தி கூறிய தென்னிந்திய ரயில்வே!

Published

on

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் தென் மாவட்ட மற்றும் மற்ற பகுதி மக்களுக்கு நற்செய்தியாக சிறப்பு ரயில்கள் விடப்படும் என தென்னிந்திய ரயில்வே கூறியுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி அன்று 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது என்பதால் சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர் என்பதும் குறிப்பாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ஆயிரக்கணக்கானோர் செல்ல உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது சிறப்பு ரயில்கள் விடப்படும் என தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. தீபாவளிக்கு முன் பதிவு செய்யப்பட்ட ரயில்களில் காத்திருப்போர் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் இதற்காக 20க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

அதுமட்டுமன்றி 3 சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது தாம்பரத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்லும் சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரலிலிருந்து சந்ரகாச்சி என்ற பகுதிக்கு செல்லும் சிறப்பு ரயில் என மூன்று ரயில்கள் இயக்கப்படும் என்றும் இந்த மூன்று பகுதிக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு சில பகுதிகளுக்கு தேவைக்கு ஏற்ப கூடுதலான ரயில்கள் இயக்க தென்னிந்திய ரயில்வே தயாராக இருப்பதாகவும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version