இந்தியா

3 மாணவர்களுக்கு கொரோனா: பள்ளிக்கு விடுமுறை, ஆன்லைன் வகுப்பு என அறிவிப்பு!

Published

on

நாடு முழுவதும் படிபடியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து தற்போது தான் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் 3 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது தினசரி 800க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதும் இதனால் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்றும் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நேற்று பிரதமர் மோடி பேசினார் .

இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள காசியாபாத் என்ற பகுதியில் கே.ஆர்.மங்கலம் என்ற பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இன்று திடீரென 3 மாணவர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் பள்ளிக்கு இரண்டு நாள் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும், ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென திடீரென 3 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவிய தகவல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version