சினிமா செய்திகள்

’தளபதி 66’ திரைப்படத்தில் இணைந்த மேலும் மூன்று பிரபலங்கள்!

Published

on

தளபதி விஜய் நடிப்பில் தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் சரத்குமார் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே இணைந்துள்ளதாக பூஜை அன்று அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சமீபத்தில் பிரகாஷ் ராஜ், பிரபு மற்றும் ஜெயசுதா ஆகியோர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள அறிவிப்பின்படி ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் சங்கீதா ஆகிய மூன்று பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரும் இந்த படத்தில் இணைய இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் சிலரும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இந்த படத்தில் நடிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version