தமிழ்நாடு

சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகள்: சிபிசிஐடி அதிரடி

Published

on

சிவசங்கர் பாபா மீது ஏற்கனவே 5 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அருகே சென்னை அருகே சுஷில்ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் அவர் மீது அடுத்தடுத்து 5 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி போக்சோ அல்லாத மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் 3 போக்சோ வழக்குகள் சிவசங்கர் பாபா மீது பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருக்கும் நிலையில் தற்போது மேலும் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் வெளியே வர வாய்ப்பே இல்லை என கூறப்பட்டு வருகிறது.

மேலும் சில மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் தற்போது அவர் மீது புதிய போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது சிவசங்கர் பாபா மீது மொத்தம் 8 போக்சோ வழக்குகள் மற்றும் ஒரு சாதாரண வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதும் இந்த ஒன்பது வழக்குகளிலும் அவருக்கு என்று ஜாமீன் கிடைக்கிறதோ, அன்றுதான் அவர் வெளியே வர முடியும் என்பதும் அதுவரை அவர் சிறையில் இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறையை திறந்து பார்த்ததில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும் எனவே அவருடைய வழக்கு மேலும் வலுவடைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version