தமிழ்நாடு

கனமழை எதிரொலி: மேலும் மூன்று மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!

Published

on

சென்னை உள்பட 20 மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்ற நிலையில் தற்போது மேலும் இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது

வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நெருங்கிவரும் நிலையில் சென்னை உள்பட பல மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சென்னை உள்பட மொத்தம் 20 மாவட்டங்களில் அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, வேலூர், திண்டுக்கல், தேனி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை, செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், தேனி, ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து இருந்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் விடுமுறை என்றும் அதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Trending

Exit mobile version