சினிமா செய்திகள்
அஜித்-விக்னேஷ் சிவன் படத்தில் 3 நாயகிகளா?
அஜித் நடிக்கவிருக்கும் 62வது திரைப்படத்தின் முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நயன்தாராவுடன் மொத்தம் மூன்று நாயகிகள் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
அஜித் திரை உலக வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவில் முழுக்க முழுக்க ஒரு காமெடி மற்றும் ரொமான்ஸ் கதையாக இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் நயன்தாரா தவிர மேலும் இரண்டு முன்னணி நடிகைகள் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
மேலும் யோகி பாபு உள்பட மொத்தம் நான்கு காமெடி நடிகர்கள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் ஒரு சில காமெடி நடிகைகளும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது
இது வரை அஜித் முழு நீள நகைச்சுவைப் படத்தில் நடித்திரத நிலையில் இந்த படம் அவருடைய நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது
இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது