தமிழ்நாடு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மூன்று வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!

Published

on

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது என்பதும் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளது என்பதும் வரும் 7ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில் மூன்று வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் 1, 10 மற்றும் 11 ஆகிய 3 வார்டுகளில் மூன்று சுயேச்சைகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை எதிர்த்து எந்த வேட்பாளரும் மனு தாக்கல் செய்யாதது அடுத்து இவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக, அதிமுக உள்ளிட்ட எந்த கட்சி வேட்பாளர்களும் இந்த 3 வார்டுகளில் போட்டியிடவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி பேரூராட்சியில் 1வது வார்டில் முத்துச்செல்வி என்பவரும் 10வது வார்டு ஜெயராமன் என்பவரும் 11 வது வார்டில் விமலா என்பவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version