சினிமா செய்திகள்

மிரட்டலா? உருட்டலா? மிஸ்டர் லோக்கல் திரை விமர்சனம்!

Published

on

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எப்படி இருக்குன்னு பார்க்கப் போகிறோம்.

ராஜேஷ் இயக்கத்தில் வெளியான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா என அவர் எடுத்த படங்களில் இருந்து காட்சிகளை அவரே சுட்டு உருவாக்கிய லோக்கலான படம் தான் மிஸ்டர் லோக்கல்.

மன்னன் படத்தின் காப்பி என ஆரம்பத்தில் இந்த படம் சொல்லப்பட்டது. அந்த படத்தை காப்பி அடித்து எடுத்திருந்தால் கூட படம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் சிறையில் கைதியாக சிவகார்த்திகேயன் இருப்பதாக மாஸ் ஓபனிங் கொடுத்துவிட்டு, அவர் ஏன் கைதானார், கடைசியில் என்ன ஆனது, நயன்தாராவுக்கும் இவருக்கும் என்ன பிரச்னை அது எப்படி சரியானது என்பதை எந்தவொரு அழுத்தமான காட்சியமைப்பும் இன்றி அசால்ட்டாக திரைக்கதை பண்ணியுள்ள படம் தான் மிஸ்டர் லோக்கல்.

சிவகார்த்திகேயன் படம் என்பதால், சரக்கு சீன்களை மட்டும் ராஜேஷ் இந்த படத்தில் தவிர்த்து, தன்னிடம் சரக்கு தீர்ந்துவிட்டது என்பதை நிரூபித்துள்ளார்.

சமீபகாலமாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தின் கதையை கேட்டாரா? இல்லையா? என்பதே தெரியவில்லை.

படத்தின் ஹைலைட் என்றால், மொக்கையான கதைக்கு, நல்ல வசனங்களை ராஜேஷ் எழுதியுள்ளது தான்.

சமகால அரசியல் மற்றும் அன்றாட நிகழ்வுகளை பல இடங்களில் வேண்டுமென்றே திணித்திருந்தாலும், அந்த வசனங்களுக்கு தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் டக்குன்னு டக்குன்னு பாடலை தவிற மற்ற பாடல்கள் ஏதும் ஹிட் இல்லை. அந்த பாடலும், அனிருத் வாய்ஸ்க்காக தப்பித்தது.

சீமராஜாவுக்கு பிறகு காமெடி சரவெடி படம் ஒன்றை சிவகார்த்திகேயன் கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அவ்வப்போது, சதிஷ், யோகிபாபு கொடுக்கும் கவுண்டர் காமெடிகள் படத்தில் நன்றாகவே ஒர்க்கவுட் ஆகியிருந்தாலும், திரைக்கதை அரைச்ச மாவாக இருப்பதால், அவை படத்திற்கு பெரிய பலமாக இல்லை.

அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார் மற்றும் தங்கையாக வரும் எருமைசாணி ஹரிஜா கதாபாத்திரங்கள், அப்படியே சிவா மனசுல சக்தி படத்துல வரும் அம்மா பொண்ணு கதாபாத்திரங்களின் காப்பி பேஸ்ட் மட்டுமே.

சினி ரேட்டிங்: 1.75/5.

seithichurul

Trending

Exit mobile version