தமிழ்நாடு

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கம்!

Published

on

அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தோப்பு வெங்கடாசலம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் பெருந்துறை தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தோப்பு வெங்கடாசலம். அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை என்று கடந்த சில வருடங்களாக அதிருப்தியில் இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் பெருந்துறை தொகுதியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனையடுத்து அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திடீரென நேற்று பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இதனை அடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பில் ’கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கு கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள காரணத்தாலும், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தோப்பு வெங்கடாச்சலம் நீக்கி வைக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version