செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு! ரஜினி ஆஜராக தயார்!

Published

on

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை ஆணையத்தின் 24-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் விசாரணையில் ஆஜராக மொத்தம் 56 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஆஜராவாரா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதியன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் வன்முறையில் முடிந்தது. அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இது குறித்த விசாரணை வரும் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். இதில் ஆஜராக மொத்தம் 56 பேருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளன. இந்த சூழலில் நாளை நடிகர் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சம்மனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். ஆனால், அவர் நாளை நேரில் ஆஜராவாரா அல்லது வழக்கறிஞர் மூலம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வாரா என்பது தெரியவில்லை. இதே நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை குறைவு எனக் காரணம் காட்டி நாளை நேரில் ஆஜராகமாட்டார். அவர் தனது வழக்கறிஞர் மூலம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version