சினிமா

பிக் பாஸ் தமிழ் 6: அடக்கொடுமையே! மைனாவும் ஏடிகேவும் இன்னமும் உள்ளே இருக்க இவரை அனுப்பிட்டங்களே!

Published

on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எதிர்பாராத எவிக்‌ஷனாக அந்த டஃப் போட்டியாளர் வெளியாகி உள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் 6வது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையிலும் இந்த சீசனிலும் ஒரு வைல்டு கார்டு என்ட்ரியாக வரவில்லை.

மைனா நந்தினி இரண்டாவது வாரத்தில் நிகழ்ச்சிக்கு வந்த நிலையில், இந்த வாரம் அவரை சேவ் செய்து விட்டு ரச்சிதாவை வெளியே அனுப்பி விட்டதாக தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

சனிக்கிழமையே பிக் பாஸ் நிகழ்ச்சியின் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளுக்கான ஷூட்டிங் முடிந்து விடும்.

இந்தியன் 2 படத்தில் பிசியாக இருந்தாலும் சனிக்கிழமை ஆனால், பிக் பாஸ் ஷூட்டிங்கிற்கு தவறாமல் வந்து விடுகிறார் கமல்ஹாசன். இந்த வாரம் அமுதவாணன் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருந்த நிலையில், அவருக்கு டிக்கெட் டு ஃபினாலே கொடுத்து காப்பாற்றி விட்டது விஜய் டிவி என்கிற குற்றச்சாட்டு வலம் வருகிறது.

ரச்சிதாவை வெளியேற்றியது அன்ஃபேர் எவிக்‌ஷன் என ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெளுத்து வாங்கி வருகின்றனர். ஏடிகே, மைனா நந்தினி, அசீம் மற்றும் கதிரை விடவே ரச்சிதா ஸ்ட்ராங்கான பெண் போட்டியாளர் என்றும் எதற்காக இவர்கள் எல்லாம் இன்னமும் வீட்டில் இருக்கும் நிலையில், ரச்சிதாவை வெளியேற்றினார்கள் என்றும் இந்த வாரம் சைக்கிள் மிதிக்கும் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகளில் ரச்சிதா சிறப்பாக ஆடினார் என்றும் இது முழுக்க முழுக்க மக்கள் ஓட்டு போட்டு வெளியேற்றவில்லை என்றும் விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் குழுவின் சதி என்றும் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version