இந்தியா

நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் மேல்நோக்கி செல்லும் அதிசயம்.. இந்தியாவில் இப்படி ஒரு சுற்றுலா பகுதியா?

Published

on

பொதுவாக நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் கீழே விழும் என்பதும், அந்த தண்ணீர் ஆறுகளில் போய் சேரும் என்பதும், ஆறுகளில் உள்ள தண்ணீர் கடலில் போய் சேரும் என்பதுதான் இயற்கையின் நியதி. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு சுற்றுலா பகுதியில் நீர்வீழ்ச்சியிலிருந்து விழும் தண்ணீர் மேல் நோக்கி செல்லும் அதிசயம் உள்ளது என்பதும் இந்த அதிசயத்தை காண இந்தியாவில் இருந்து மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் அம்போலி என்ற பகுதியில் தான் இந்த பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி உள்ளது. காவல்செட் பாயிண்ட் என்ற பகுதியில் உள்ள இந்த மிகப்பெரிய நீர்வீழ்ச்சியில் இருந்து பள்ளத்தாக்கு பகுதிக்கு தண்ணீர் பாய்ந்து வருகிறது. அப்போது பள்ளத்தாக்கில் இருந்து வீசும் அழுத்தமான காற்று காரணமாக நீர்வீழ்ச்சியில் விழுந்து விழும் தண்ணீர் கீழ் நோக்கி செல்ல விடாமல் மேலே தள்ளுகிறது. எனவே நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் தண்ணீர் மேல் நோக்கி செல்கிறது.

குறிப்பாக ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை காலத்தில் மட்டுமே இந்த அதிசயம் நிகழ்வதாக அந்த பகுதிகளில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். மழைக்காலத்திலும் சில சமயம் நீர்வீழ்ச்சியிலிருந்து மேல் நோக்கி நீர் செல்லும் காட்சியையும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை எழில் கொஞ்சம் பசுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் கொண்ட இந்த மலைகள் காரணமாக காவல்செட் பாயிண்ட் மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக காணப்படுகிறது. நீங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சுற்றுலா செல்லும்போது கண்டிப்பாக இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க வேண்டும். இந்த நிகழ்ச்சி இந்த நீர்வீழ்ச்சியை பார்க்க அம்மாநில அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது என்பதும் இந்த நீர்வீழ்ச்சியை நீங்கள் பார்க்க போகும் போது ரெயின்கொட் அணிந்து கொண்டு செல்வது அவசியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிவியலில் எத்தனையோ அதிசயங்களை நாம் பார்த்திருக்கின்றோம், ஆனால் இயற்கை தவிர இது மாதிரி ஒரு அதிசயத்தை வேறு யாராலும் நிகழ்த்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. நீர்வீழ்ச்சி, பள்ளத்தாக்கில் இருந்து பேசும் காற்று ஆகிய இரண்டுமே இயற்கை என்பதால் ஒரு இயற்கையை இன்னொரு இயற்கை தோற்கடிக்கிறது என்பது மிகச் சிறந்த அதிசயங்களில் அற்புதங்கள் ஒன்றாக கருதப்படுகிறது.

இயற்பியல் விதிகளுக்கு மாறாக இது இருப்பதாக கூறப்பட்டாலும் இதுவும் ஒரு தூய இயற்பியல் தான் என விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். மேலும் இந்த அற்புதம் எப்படி நிகழ்கிறது என்பதை விளக்கம் அளிக்கக்கூடிய இயற்பியல் ஆய்வாளர்களும் இங்கு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் போது நிலையில் இந்த அருவியை உடனடியாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் ஏற்படுவது உறுதி.

Breathtaking western ghats at Kavalshet point (Near Amboli)

Trending

Exit mobile version