இந்தியா

AI தொழில்நுட்பத்தால் இந்த வேலைகளில் இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை.. யார் யார் தெரியுமா?

Published

on

தொழில்நுட்பம் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்பதும் இதன் காரணமாக பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த துறையின் வளர்ச்சி காரணமாக ஒரு சில வேலை வாய்ப்புகள் கிடைத்த போதிலும் ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்து வருகிறார்கள் என்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியாக எதையும் தாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் AI தொழில்நுட்பம் மட்டுமல்ல இதை விட மேம்பட்ட தொழில்நுட்ப வந்தாலும் ஒரு சிலருக்கு வேலை வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வேலைகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

சிற்றுண்டிச்சாலை உதவியாளர்கள்: இந்த பணி செய்பவர்கள் வாடிக்கையாளர்களை மரியாதையாக சேவை செய்யும் துறையில் இருப்பவர்கள். மக்களுக்கு உணவை தயாரித்து வழங்குகிறார்கள். AI போட்களால் இந்த வேலையை செய்ய முடியாது.

ஆட்டோ மெக்கானிக்ஸ்: ஆட்டோமொபைல் சேவைகள் மற்றும் பழுதுபார்க்கும் ஒரு ஆட்டோமொபைல் பணியாளர் செய்யும் வேலையை AI போட்களால் செய்ய முடியாது.

பார்டெண்டர்கள்; பார்டெண்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு பானங்களைக் கலந்து பரிமாறும் வேலையை AI கருவியால் செய்ய முடியாது.

தச்சர்கள்: தச்சர்கள் பொதுவாக பல்வேறு குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை கட்டமைப்புகள் மற்றும் சாதனங்களை கட்டமைக்கிறார்கள். இவர்கள் செய்யும் வேலையை எந்த தொழில்நுட்பமும் செய்ய முடியாது.

பிளம்பர்கள்: வீடுகளில் நீர், எரிவாயு அல்லது பிற திரவங்களை எடுத்துச் செல்லும் குழாய்கள் மற்றும் சாதனங்களை பிளம்பர்கள் செய்யும் வேலையை ஒரு AI போட்களால் செய்ய முடியாது.

ஓவியர்கள்: ஒரு ஓவியர் வெவ்வேறு தேவைகளுக்கு வண்ணப்பூச்சுகளை கலப்பதில் பணிபுரிகிறார் மற்றும் சுவர்களுக்கு வண்ணம் தீட்டுவதற்கும் விரிசல்களை நிரப்புவதற்கும் தூரிகைகள் பயன்படுத்தி வரைகிறார்கள். இந்த வேலைக்கு நிறைய கைவேலை தேவைப்படுவதால் இந்த வேலையை AI போட்களால் செய்ய முடியாது.

seithichurul

Trending

Exit mobile version