தமிழ்நாடு

‘ஐபோன், நிலாவுக்குச் சுற்றுலா, வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர்..!’- மதுரையை அதிரவிடும் வேட்பாளர்- பின்னணி என்ன?

Published

on

மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், துலாம் சரவணன் என்னும் நபர் வித்தியாசமான வாக்குறுதிகள் கொடுத்து மொத்த தொகுதியையும் அதிர விட்டுள்ளார். 

அவரது வாக்குறுதிப் பட்டியல்களில் சில:

மக்கள் அனைவருக்கும் இலவசமாக ஐபோன் வழங்கப்படும்.

மக்கள் அனைவருக்கும் நீச்சல்குளம் வசதியுடன் 3 மாடி வீடு கட்டித் தரப்படும்.

வீடு ஒன்றுக்கு வருடம் ஒரு கோடி ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அனைத்து வீட்டுக்கும் 20 லட்சம் மதிப்பு கார் வழங்கப்படும்.

ஒவ்வொரு வீட்டுக்கும் சிறய வகை ஹெலிகாப்டர் வழங்கப்படும்.

இல்லத்தரசிகளுக்கு வேலை செய்ய ரோபோ வழங்கப்படும். 

இளைஞர்கள் சுய தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் வழங்கப்படும்

இப்படி அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வாக்குறுதிகள் கொடுத்தது ஏன் என்பது குறித்து துலாம் சரவணன், ‘இப்படியான வியந்து போகும் அறிவிப்புகளைக் கொடுத்தால் தான் மக்கள் நம்மை கவனிக்கிறார்கள். அதனால் தான் செய்தேன். 

என்னைப் பொறுத்தவரை நான் தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டமன்ற உறுப்பினருக்கு கொடுக்கப்படும் தொகுதி நிதியை எடுத்து மக்களுக்காக செலவு செய்து, அதற்கான கணக்குகளை மக்கள் முன்னிலையில் வைப்பேன்’ என்கிறார்.

seithichurul

Trending

Exit mobile version