இந்தியா

ரோபோ மனிதன் கேள்விப்பட்டதுண்டு.. ரோபோ யானையை பார்த்ததுண்டா? கேரள கோவிலில் ஒரு ஆச்சரியம்..!

Published

on

தற்போது மனித வாழ்க்கையில் ரோபோ பல இடங்களில் இடம்பெற்று வருகிறது என்றும் மனிதர்களுக்கு பதிலாக ரோபோக்கள் பல வேலைகளை சுலபமாக செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் மனித ரோபோக்கள் மட்டுமின்றி விலங்குகளின் ரோபோக்கள் செய்யும் நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக பீட்டா அமைப்பு யானை ரோபோவை கேரளாவில் உள்ள ஒரு கோவிலுக்கு பரிசாக அளித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவில் உள்ள கோவில் விசேஷம் என்றால் யானை இல்லாமல் இருக்காது என்பதும் கேரள கோவில் விசேஷங்களில் யானை முக்கிய இடம் பிடித்துள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் யானைகள் கட்டி வைக்கப்பட்டு பாகன்களால் துன்புறுத்தப்படுவதாகவும் காட்டில் சுதந்திரமாக இருக்க வேண்டிய விலங்கு மனிதனால் சிறைப்பட்டு இருப்பதாகவும் பீட்டா அமைப்பு கருத்து தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள இரிஞ்ஞாடப்பிள்ளி ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் ரோபோ யானை ஒன்றை உருவாக்கி பீட்டா அமைப்பு பரிசாக அளித்துள்ளது. 800 கிலோ எடை கொண்ட இந்த யானை ரப்பர் கோட்டிங் மற்றும் அயன் பிரேம் கொண்டு அச்சு அசலாக பார்ப்பதற்கு நிஜ யானை போலவே இருக்கின்றது என்பதும் காதுகளை ஆட்டிய வண்ணம் இருக்கும் இந்த யானை மின்சாரத்தால் இயக்கப்படுவதாகவும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த யானை மீது நான்கு பேர் உள்ளாரை அமர்ந்து கொள்ளலாம் என்றும் இந்த யானையால் எந்தவித பாதிப்பும் இருக்காது என்று கூறப்படுகிறது. இந்த யானையை செய்வதற்கு 5 லட்ச ரூபாய் செலவாகி உள்ளது என்றும் இந்த யானையை அனைத்து கோவில்களிலும் பயன்படுத்துவதன் மூலம் நிஜ யானை துன்புறுத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

யானைகள் என்பது ஒரு சமூக வாழ் உயிரினம் என்றும் அது தங்கள் குடும்பத்தோடு காடுகளில் வாழ வேண்டிய விலங்கினம் என்றும் அந்த யானையை மனிதர்கள் கோவில் விசேஷங்களுக்காக ஆண்டு கணக்கில் கட்டி வைத்து துன்புறுத்துவதை ஏற்க முடியாது என்றும் அதற்காகத்தான் இந்த புதிய ரோபோ யானையை உருவாக்கியுள்ளோம் என்றும் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏற்பாடுகளுக்கு நடிகை பார்வதி உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version