கிரிக்கெட்

தோனி சொன்னது இது தான்: நடந்தது என்ன?

Published

on

சென்னை அணி வீரர்கள் அதிகமான வைடு மற்றும் நோபால் வீசியதால் அணியின் கேப்டன் தோனி கோபமாகி நோபால், வைடுகள் வீசுவதை கட்டுப்படுத்தவில்லை என்றால் நீங்கள் புதிய கேப்டன் கீழ் விளையாட நேரிடும். இது எனது 2-வது எச்சரிக்கை. இல்லையென்றால் நான் வெளியேறிவிடுவேன் என கூறியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மையில் தோனி அப்படி கூறவே இல்லையாம்.

Dhoni 1

ஐபிஎல் விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை என்றால் அணியின் தலைவருக்கு எச்சரிக்கை விடுத்து அபராதம் விதிக்கப்படும். ஒரு சீசனில் மூன்று முறை மெதுவாக பந்துவீசினால் அணியின் கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். குஜராத் மற்றும் லக்னோ அணிக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டத்திலும் சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்த விதி காரணமாக தோனிக்கு எச்சரிக்கையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த விதியினை மனதில் வைத்து தான் தோனி, பவுலர்கள் நோபால் மற்றும் வைடுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர்கள் புதிய கேப்டனின் கீழ் விளையாட தயாராக இருக்க வேண்டும் என்றார். மேலும் சிரித்தபடியே இது எனக்கு வழங்கப்பட்ட இரண்டாவது எச்சரிக்கை. அடுத்த முறை இப்பட்டி நடந்தால் நான் ஒரு போட்டியில் விளையாடாமல் வெளியே இருக்க நேரிடும் என்றார்.

இது தான் தோனி கூறிய உண்மையான அர்த்தம். ஆனால் தோனி கோபமடைந்து தான் சென்னை அணியில் இருந்து விலகுவதாக எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் வெளியானது. தற்போது அது உண்மை இல்லை என்பது ஐபிஎல் விதியை சுட்டிக்காட்டி தான் தோனி அவ்வாறு பேசினார் என்பது தெளிவாக புரிகிறது.

seithichurul

Trending

Exit mobile version