சினிமா செய்திகள்

இது சூப்பர்ஸ்டாரின் ‘தர்பார்’ – தலைவர் 167வது படத்தின் தலைப்பு அறிவிப்பு!

Published

on

சர்கார் படத்தைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர். முருகதாஸ். அந்த படத்திற்கு தர்பார் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.

இந்த படத்தில் சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார். பேட்ட படத்தைத் தொடர்ந்து இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி படத்திற்கு பிறகு 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு மீண்டும் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில், மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ரஜினியின் தர்பார் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version