சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தின் பெயர் இதுதான்!!!

Published

on

தமிழின் மாஸ் ஹீரோ வரிசையில் விஜய், அஜித்திற்குப் பிறகு இருக்கும் பெயர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து குடும்பப் பாங்கான மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே அவர் அயலான் மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இன்னும் ஒரு சில வாரங்களில் டாக்டர் படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்து அறிவிப்பு வரும். இந்தப் படத்தை ‘விஜய் 65’ படத்தை இயக்கும் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புதுமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் எனத் தகவல். அந்த படத்துக்கு ‘சிங்கப்பாதை’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றன.

‘சிவாஜி’ படத்தின் இடைவேளை காட்சியின்போது ரஜினிகாந்த் ஒரு ரூபாய் நாணயத்தை மேலே சுண்டி விடுவார். தலை விழுந்தால் சிங்கப்பாதையில் சென்று எதிரிகளை எதிர்ப்பேன் என்றும், பூ விழுந்தால் அமெரிக்காவுக்கு சென்று விடுவேன் என்றும் எண்ணம் வைத்திருப்பார். இந்தக் காட்சியில் தலை விழுந்து விடும். அன்றிலிருந்து சிங்கப்பாதை என்பது பிரபலமான தமிழ் வார்த்தையாக மாறிவிட்டது. அந்த வகையில் ‘சிங்கப்பாதை’ என்னும் தலைப்பே மக்கள் மத்தியில் நல்ல ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version