சினிமா செய்திகள்

ரஜினிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது எப்படி? எதுக்கு கோபப்பட்டார் தெரியுமா?

Published

on

கொரோனா ஊரடங்கு காரணமாக எல்லா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு டிசம்பர் 14ம் தேதி துவங்கியது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் படப்பிடிப்பில் பங்கு பெற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா உறுதியானது. இதனால் எங்கே தனக்கும் இத் தொற்று ஏற்பட்டு விடுமோ என்ற பயம் ரஜினிக்கு ஏற்பட்டது. இந்த பயத்தால் தான் ரஜினிக்கு ரத்தக்கொதிப்பு தாறுமாறாக ஏறியும், இறங்கியும் உள்ளது.

இதனால் ஹைதராபாத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரஜினிக்கு மேலும் சில பரிசோதனைகள் செய்யப்பட்டது. அப்போது ரஜினி ஒரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆவார் என்று ரஜினியின் அண்ணன் சத்யநாராயணா தெரிவித்திருந்தார். இதனை அறிந்த அவரின் ரசிகர்கள் தலைவா, நீங்கள் தான் முக்கியம் நீங்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

மேலும் நடிகை வனிதாவும் பதிவிட்ட பரபரப்பான டுவிட்டை பதிவிட்டுள்ளார். அதில் அவர்,  டியர் ரஜினி அங்கிள், நீங்கள் அரசியலுக்கு வந்து கஷ்டப்படுவதை பார்க்க நாங்கள் விரும்பவில்லை…எங்களுக்கு நீங்கள் தேவை என்று வனிதா கூறியுள்ளார். இதனைப் பார்த்த ரஜினி ரசிகர்களில் சிலர் கோபம் அடைந்துள்ளனர். இவையணைத்துமே ரஜினிக்கு எரிச்சலூட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version