தமிழ்நாடு

‘இந்த ஒரே காரணம் தான்…’- கொரோனா அதிகரிப்புக்கு சுகாதாரத் துறை செயலாளர் விளக்கம்

Published

on

இந்தியாவிலும் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வண்ணம் இருக்கிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த திடீர் தொற்றுப் பரவல் அதிகரிப்பு என்ன காரணம் என்பது குறித்து சுக்தாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் கொடுத்துள்ளார்.

‘தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும். இதற்கு காரணம் நாம் தினம் தினம் பரிசோதனை செய்யும் அளவை அதிகரிப்பதே. எனவே நம் மாநிலத்தில் ஒரு நாள் பாதிப்பு என்பது இரண்டாயிரம் வரை போக வாய்ப்புள்ளது.

கொரோனா தொற்றைப் பொறுத்தவரை தொடர்ந்து பரிசோதனை செய்வது, பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவது ஆகியவை மட்டுமே ஒரே வழி. மற்றப்படி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்றுப் பரவலுக்கு இருக்கும் முக்கிய காரணம், மக்கள் மாஸ்க் அணியாமல் இருப்பது தான்.

நாங்கள் தினமும் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து தான் வருகிறோம். இருப்பினும் அரசு அதிகாரிகளும் கூட எங்களைப் பார்த்தால் முகக் கவசம் எடுத்து அணிந்து கொள்கிறார்கள்.

அதேபோல நாங்கள் மருத்துவமனைகளுக்குச் சோதனைக்குச் சென்றால், அங்கேயும் கூட பலர் மாஸ்க் அணியாமலேயே கொரோனா வார்டுக்கு அருகில் சுற்றி வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள். இது தொற்று பாதிப்பை மிக அதிகமாக உயர்த்தும்’ என்று எச்சரித்துள்ளார் செயலாளர் ராதாகிருஷ்ணன்.

seithichurul

Trending

Exit mobile version